டெக்னோ நிறுவனம், பேன்டம் அல்டிமேட் (Tecno Phantom Ultimate) எனும் வித்தியாசமான ரோலபிள் கான்செப்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.
ஃபோல்டபிள் மற்றும் ரோலபிள் ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் பல்வேறு நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு வருகின்றன.
இதில் முன்னிலை வகிக்கும் சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் முதல் ரோலபிள் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன் சாதனம் எப்படி இருக்கும் என்ற விபரங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளது.
இந்த வரிசையில் அதிவேக மற்றும் தனித்துவமான டிசைன்களில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கும் டெக்னோ நிறுவனம், விரைவில் டெக்னோ பேன்டம் அல்டிமேட் (Tecno Phantom Ultimate) எனும் வித்தியாசமான ரோலபிள் கான்செப்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.
டெக்னோ நிறுவனம் அதன் புதிய தயாரிப்பை, தனது R&D ஆய்வகங்களில் இருந்து நேரடியாக காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கான்செப்ட் போனில் இரண்டு பக்க உருட்டக்கூடிய திரை கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஸ்மார்ட்போனின் திரையானது சாதாரண அளவை விட உருண்டு பெரிதாகும். அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் வெறும் 1.2 முதல் 1.3 வினாடிகளில் டிஸ்ப்ளேவை 6.55 இன்ச் முதல் 7.11 இன்ச் வரை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த தொழில்நுட்பத்திற்காக, பாண்டம் அல்டிமேட் போனில் சிங்கிள் டிரைவ் மோட்டார் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

