Friday, March 13, 2026
HomeUncategorizedபேப்பர் நாப்கின்கள் தவிர்ப்பு - பெங்களூரு ஹோட்டல்களின் முன்னெடுப்பு

பேப்பர் நாப்கின்கள் தவிர்ப்பு – பெங்களூரு ஹோட்டல்களின் முன்னெடுப்பு

பெங்களூரு நகரத்தில் அமைந்திருக்கும் உணவு விடுதிகளில் பேப்பர் நாப்கின்களை முழுவதுமாக தவிர்ப்பது என்று, அரசின் அனுமதியோடு அந்த ஹோட்டல்களின் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர். நாளொன்றுக்கு சுமார் 10,000 கிலோ என்றளவுக்கு திடக்கழிவாக இந்த பேப்பர் நாப்கின்கள் பெங்களூரு நகரை அச்சுறுத்துகின்றன. இவற்றை பயன்பாட்டை குறைப்பதன் மூலம், நகரின் திடக்கழிவு மேலாண்மைக்கு உதவுவதோடு, ஹோட்டல்களின் செலவினத்திலும் கணிசமாக மிச்சமாகும். இதன்படி, இனி பெங்களூரு நகரத்தின் உணவு விடுதிகளின் உணவுமேஜை உட்பட எங்கேயும் பேப்பர் நாப்கின்கள் கிடைக்காது.

டிஷ்யூ பேப்பர் எனப்படும் பேப்பர் நாப்கினுக்கு மாற்றாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணியினாலான கர்ச்சீப் மற்றும் துண்டுகளின் பயன்பாடு இதனால் அதிகரிக்கும் எனவும் கணித்திருக்கிறார்கள்.

அதே வேளையில், வாடிக்கையாளர் விரும்பும் சேவையை தவிர்க்க இயலாது என்பதால், கேட்கும் வாடிக்கையாளருக்கு மட்டும் பேப்பர் நாப்கின்களை அளவோடு வழங்கவும் முடிவு செய்திருக்கிறார்கள். பெங்களூரு ஹோட்டல்களின் முன்னெடுப்புக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, நாட்டின் இதர உணவு விடுதிகளும் இதனை பின்பற்றக் கூடும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments