Sunday, March 29, 2026
HomeUncategorizedநிரம்பியது ஆயன்குளம் அதிசய கிணறு: என்ன நடந்தது?

நிரம்பியது ஆயன்குளம் அதிசய கிணறு: என்ன நடந்தது?

திருநெல்வேலியில் மாபெரும் வெள்ளத்தையும் உள்வாங்கும் ஆற்றல் கொண்ட ஆயன்குளம் அதிசய கிணற்றில் நீர் வேகமாக நிரம்பிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை, முதுமொத்தன்மொழி ஊராட்சி, ஆயன்குளத்தில் அதிசய கிணறு உள்ளது. இந்தக் கிணறுக்குள் எவ்வளவு வெள்ளத்தை திருப்பி விட்டாலும் நிரம்புவதே இல்லை. 

2022ல் பெருமழை பெய்து உருவான வெள்ளம் கிணறுக்குள் பாய்ச்சப்பட்டபோதும் கிணறு நிரம்பவில்லை. ஐ.ஐ.டி., பேராசிரியர்களின் ஆய்வில், சுண்ணாம்புப் பாறைகளால் உருவான பகுதி என்பது தெரிய வந்தது.

சுண்ணாம்பு பாறையில் துளைகள் பெரிதாகி, 50 கி.மீ., சுற்றளவுக்கு நிலத்தடி நீர்வழிப்பாதை உருவாகியிருப்பதால், கிணறு நிறைவதில்லை என கண்டறியப்பட்டது.

தற்போது நான்கு மாவட்டங்களை வெள்ளம் மூழ்கடித்து வரும் நிலையிலும், இந்த அதிசயக் கிணறு நேற்று (டிச.,18) வரை நிரம்பவில்லை.

நிரம்பியது.

மாபெரும் வெள்ளத்தையும் உள்வாங்கும் ஆற்றல் கொண்ட ஆயன்குளம் அதிசய கிணற்றில் நீர் வேகமாக நிரம்பிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

எந்த வெள்ளத்திலும் நிரம்பாத கிணறு இந்த வெள்ளத்தில் திடீரென இன்று அதிகாலை நிரம்பியது மக்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிணற்றில் சுவர் இடிந்து மண் விழுந்ததால் அடைப்பு ஏற்பட்டு நிரம்பியது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments