Thursday, April 9, 2026
HomeUncategorizedதனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் சொன்ன

தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் சொன்ன

தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் சொன்ன அப்டேட்ஸ்!

இதுவரை மிதமான மழைதான் பெய்து வந்தது. தற்போதுதான் மழை மேகங்கள் சென்னையை நோக்கி நகர்ந்து வருகின்றன. அடுத்த சில மணி நேரங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சென்னையில் இதுவரை 50 முதல் 70 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது.

தென் சென்னையின் சில பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான வாய்ப்புகள் இல்லை.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடர்ந்த மேகங்கள் இருப்பதால், அடுத்த சில மணி நேரங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments