தெலுங்கானா மாநிலம் விகாரபாத் மாவட்டம், காமா ரெட்டி கூடப்பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி (25). இவர் மகேந்திர ரெட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில் திடீரென பிரச்சனை ஆரம்பித்தது. அதாவது சுவாதி கர்ப்பமானவுடன் கணவன் மனைவிக்குள் பல பிரச்சனைகள் குடும்பத்த தகராறு என வந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மகேந்திர ரெட்டி கர்ப்பிணி என்றும் பாராமல் சுவாதியை வெட்டி கொலை செய்துள்ளார். பிறகு அவரது உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் போட்டு புறநகர் பகுதியில் உள்ள ஆற்றில் வீசி உள்ளார்.
ஏதோ வீட்டில் சத்தம் கேட்பது உணர்ந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் வெட்டிய உடல் பாகங்கள் பிளாஸ்டிக் கவரில் போட்டுக் கொண்டிருந்ததை கவனித்தவுடன் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். இந்த சம்பவத்தை போலீசுக்கு தெரிவித்துள்ளனர். இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மகேந்திர ரெட்டியை கைது செய்துள்ளனர். மேலும் அந்த வீட்டில் உள்ள இருந்த உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அது மட்டும் இல்லாமல் ஆற்றில் வீசப்பட்ட உடல் பாகங்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கு இடையே மனைவியை காணவில்லை என்றும்,போலீசில் புகார் அளிக்க இருப்பதாகவும் ஸ்வாதியின் தங்கைக்கும் கூறியுள்ளார். கொலையை மறைப்பதற்காக இப்படி நாடக மாடிக் கொண்டிருந்த இவரது சுயரூபம் விசாரணையில் தெரியவந்துள்ளது. அது மட்டுமில்லாமல் சுவாதி ஏன் கொலை செய்தார் என்று விசாரித்த பொழுது,” சுவாதி வேறு மதத்தைச் சேர்ந்தவர் ,எனவே சுவாதி மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள மகேந்திர ரெட்டிக்கு விருப்பம் இல்லாததால் ஏற்கனவே ஒருமுறை கரு கலைப்பு செய்துள்ளார். மீண்டும் அவர் கர்ப்பம் ஆனதால் ஆத்திரமடைந்த மகேந்திர ரெட்டி மனைவி கொன்றுள்ளதாக போலீசில் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
