Friday, March 6, 2026
HomeUncategorizedஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'டிரைவர் ஜமுனா' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

‘வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய இயக்குநர் பா. கின்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ‘ஆடுகளம்’, நரேன், ஸ்ரீ ரஞ்சனி, ‘ஸ்டான்ட் அப் காமடியன்’ அபிஷேக், ‘ராஜாராணி’ பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தை கவனிக்க, படத்தொகுப்பை ஆர். ராமர் மேற்கொண்டிருக்கிறார். சாலை பயணத்தை மையப்படுத்திய இந்த திரைப்படத்திற்கு ஒலியின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதால், படத்தின் ஒலி வடிவமைப்பை, முன்னணி ஒலி வடிவமைப்பு நிறுவனமான ஸிங்க் சினிமா ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் 18 ரீல்ஸ் சார்பில், பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி திரைப்பட தயாரிப்பாளருமான எஸ். பி. சௌத்ரி தயாரித்திருக்கிறார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments