Home Uncategorized ஆகஸ்ட் 10ல் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு; அக்டோபரில் சேவை தொடங்குகிறது

ஆகஸ்ட் 10ல் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு; அக்டோபரில் சேவை தொடங்குகிறது

ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட 4 நிறுவனங்கள் போட்டி போட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவுபெற்றுள்ளது. 

ரூ.1.50 லட்சம் கோடி வரை ஏலத் தொகை சென்றுள்ளது. 

இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 10ம் தேதி 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பணிகள் நிறைவுபெறுகின்றன. 

அதன்பின், அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கும் என்று தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

Exit mobile version