அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்! பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு ஆம் ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன் கண்டனம்!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த கொடூர சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது.
தமிழகத்தில் மக்களுக்கு கல்வி பயில, தொழில் தொடங்க, அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய மிகுந்த சேவை மனப்பான்மையோடு பாடுபட்டவர். இதன் மூலம் பலரது நன்மதிப்பை பெற்றவர் ஆம்ஸ்ஸ்ட்ராங் ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் சட்டம் நிலைத்திருக்கும் ஒரு நாட்டில் இப்படி ஒரு கட்சியினுடைய தலைவர் வெட்டி கொல்லப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது,
தமிழ்நாடு அரசும் காவல்துறையும் இந்த படுகொலையை செய்த கொலைகாரர்களை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். யார் எந்த குற்றங்கள் செய்தாலும் அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தான் யாவரும் செயல்பட வேண்டும் தீர்ப்புகளை அவரவர்கள் தீர்மானிப்பது சரியல்ல.
இதுபோல் வன்முறைகளை யாரும் கையில் எடுக்கக் கூடாது. தமிழ்நாடு அரசும் காவல்துறையும் நீதித்துறையும் அரசியல் எதிரிகளால் அச்சுறுத்தல் மற்றும் உயிருக்கு ஆபத்து இருக்கும் அரசியல் தலைவர்களுக்கும் பொது வாழ்வில் தங்களை அர்ப்பணித்து செயலாற்றுபவர்களுக்கும் தகுந்த பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
அமைதியாக இருக்கிற தமிழகத்தில் இத்தகைய படுகொலைகளை வன்முறையாளர்கள் நிகழ்த்துவது மிகுந்த வேதனைக்குரியது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதற்கு என்ன பின்னணி என்பதை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
திரு ஆம்ஸ்ட்ராங் அவர்களது மறைவால் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். வசீகரன் மாநில தலைவர் ஆம் ஆத்மி கட்சி தமிநாடு 6/7/2024
