நம்பிக்கை வாக்கெடுப்பு, அரசியல் களேபரங்கள், அதிகாரிகளின் அதிரடி இடமாற்றம் எனத் தலைமைச் செயலகமே ‘ஆக்ஷன்’ மோடுக்கு மாறியிருக்கும் வேளையிலும், தன் தாய் வீடான சினிமாவை முதலமைச்சர் விஜய் கடைக்கண்ணால் பார்க்கத் தவறவில்லை.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘கருப்பு’ திரைப்படம் வரும் மே 14 அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், அப்படத்திற்குச் சிறப்பு அனுமதி வழங்கித் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி வரும் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் வீதம் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் தீர்ப்பு, கொறடா நியமனம் என அரசியலில் ‘திக் திக்’ காட்சிகள் அரங்கேறினாலும், திரையில் சூர்யா காட்டும் ஆக்ஷனைத் தொண்டர்கள் ரசிக்க வழிவகை செய்திருக்கும் முதலமைச்சரின் இந்தச் செயல், “அரசியல் வேற.. சினிமா வேற.. ஆனா பாசம் ஒன்னுதான்!” என்று சொல்வது போல் அமைந்துள்ளது.
