Home Uncategorized அந்தமானில் காற்றழுத்த தாழ்வு பகுதி: மீண்டும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

அந்தமானில் காற்றழுத்த தாழ்வு பகுதி: மீண்டும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று மாலை கரையை கடந்தது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்பட சில இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வந்தது. மேலும், நாளை அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதனால், தமிழகம் முழுவதும் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

Exit mobile version