Home Uncategorized இளைஞரை காப்பாற்றிய ஆய்வாளர் ராஜேஸ்வரி

இளைஞரை காப்பாற்றிய ஆய்வாளர் ராஜேஸ்வரி

மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்று கருதப்பட்ட இளைஞரை காப்பாற்றி தக்க நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய அண்ணா நகர் ஆய்வாளர் ராஜேஸ்வரி

சென்னை, டி.பி சத்திரம் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் மயங்கிய நிலையில் கிடந்த வாலிபரை டி.பி. சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

நேற்று (11.11.2021) காலை 8.30 மணியளவில் K-6 T.P.சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் வேலை செய்யும் உதயகுமார், வ/28, என்பவர்  மேற்படி இடத்தில் மயங்கிய நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் K-6 T.P.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ராஜேஸ்வரி தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று மயங்கிய நிலையில் கிடந்த உதயகுமாரை மீட்டு ஆட்டோ மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Exit mobile version