ஒருமுறை மயில் இராவணன் என்னும் ஒரு அரக்கனிடமிருந்து ஸ்ரீராம பிரானையும், அவர் தம்பி லெஷ்மணரையும் காப்பதற்காக ஆஞ்சநேயர் போரிட வேண்டியிருந்தது.
அதற்காக ஆஞ்சநேயரால் எடுக்கப்பட்ட இன்னொரு அவதாரமே “பஞ்சமுக ஆஞ்சநேயர்”. இயல்பிலேயே ஆஞ்சநேயர் மிகுந்த பலசாலி. ஆயினும் தனக்கு மேலும் பலம் தேவையென உணர்ந்தார்.
ஆகையால் இரண்ய கசிபுவை வதம் செய்ய தூணிலிருந்து வெளிப்பட்ட உக்கிர மூர்த்தியான நரசிம்மர், குதிரைமுகத்துடன் அவதாரமெடுத்து அசுரர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டுவந்த ஹயக்ரீவர், பாதாள லோகம் வரை சென்று அசுரனை அழித்து தேவர்களை மீட்ட, வராக சுவாமி, திருமாலின் வாகனமான கருட மூர்த்தி, ஆகிய நால்வரையும் ஆஞ்சநேயர் வேண்டி நின்றார்.
அவர்களும் ஆஞ்சநேயருக்காக தங்கள் பலத்தினை தந்து ஆஞ்சநேயருக்கு உதவினர். ஆஞ்சநேயரும் மயில் இராவணனுடன் போரிட்டு அவனை அழித்து, ஸ்ரீஇராமரையும், லெக்ஷ்மணரையும் காத்தார். ”பஞ்ச” என்பது தமிழில் “ஐந்து” . ஆக தன் பலத்துடன் ஆஞ்சநேயர் தன்.
மேலும் நால்வரின் பலத்தையும் பெற்று, அரக்கனை வென்றதைக் காட்டுவதே “பஞ்ச முக ஆஞ்சநேயர்” எனும் திருக்கோலமாகும். நரசிம்மரின் முகம் செயல்களில் வெற்றி, லட்சுமிதேவியின் கடாட்ஷம், மேலும் பயத்தினால் உண்டாகும் பிரச்சனைகள், பில்லி சூன்யம் துஷ்ட தேவதைகளால் உண்டாகும் பிரச்சினைகளிலிருந்து நிவர்த்தி தருகிறது. ஹயக்கிரீவ முகம் அறிவாற்றல், ஆன்மிக பலம், ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஆகியவை கிட்டுகின்றன.
வராக முகமானது மனத்துணிவு பெற்று, தீராத கடன், பொருள் இழப்புகளிலிருந்து விடுதலை வழங்குகிறது. கருட முகமானது விஷம், விஷநோய்கள், சரும நோய், பிற ஊழ்வினை நோய்கள் ஆகியவற்றை நீக்கி மன அமைதி மற்றும் சகல சௌபாக்கியங்களை அளிக்கும்.
ஆஞ்சநேயர் முகமானது நற்பண்புகள், விசுவாச சிந்தனை, சத்ருக்களை எதிர்கொள்ளும் ஆற்றல் ஆகிய அனைத்துமே பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்குவதால் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஜெய்ஸ்ரீராம்
