Monday, March 16, 2026
HomeUncategorizedகோவில் கும்பாபிஷேகம் தடைபட்டதால் அன்னூரில் சர்ச்சை

கோவில் கும்பாபிஷேகம் தடைபட்டதால் அன்னூரில் சர்ச்சை

அன்னூர் கரிவரதராஜர் கோவிலில் ₹2.5 கோடி மதிப்பில் பக்தர்கள் நன்கொடையில் திருப்பணிகள் செய்யபட்டு இன்று 01.12.23 காலை 7.45க்கு கும்பாபிஷேகம் நடப்பதாக இருந்தது.

நேற்று 29.11.23அதிகாலை 5.00 முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கின. ஆனால், அறநிலையத்துறை அதிகாரி ரமேஷ் கிடைக்க வேண்டிய 30% கமிஷன் கிடைக்காத காரணத்தால் நேற்று மாலை 5.00 மணிக்கு காவல்துறையை வைத்து கூடியிருந்த நூற்றுகணக்கான பக்தர்களை கைது செய்வோம் என மிரட்டி வெளியே அனுப்பிவிட்டு கோவிலை பூட்டியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும், தமிழகம் இதுவரை கண்டிராத நிகழ்வு, கமிஷனுக்காக கோவில் கும்பாபிஷேகத்தை நிறுத்தும் அளவிற்கு துணிந்துவிட்டது அறநிலையதுறை என மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கு என தகவல்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments