Home Uncategorized ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் சூர்யா – த்ரிஷா திரைப்படம்

ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் சூர்யா – த்ரிஷா திரைப்படம்

நடிகர் சூர்யா, நடிகை த்ரிஷா நடிக்கும் ‘சூர்யா 45’ படத்துக்காக, 500-க்கும் அதிகமான நடனக் கலைஞர்களுடன் பிரம்மாண்ட பாடல் காட்சி உருவாகிறது. திருவிழா தோற்றத்தில் அமைக்கப்படும்.

இப்பாடலுக்கான நடன அமைப்புகளை ஷோபி மேற்கொள்கிறார். சமீபத்திய சூர்யா படங்களில் இப்படியான வெகு சிறப்பான பாடல் இடம்பெறாததால், இது ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் இப்படத்தில், இந்திரன்ஸ், ஸ்வாசிகா, அனகா மாயா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க, ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு மற்றும் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

Exit mobile version