ஆவியை நைவேத்தியம் செய்யும் வினோத கோவில்? வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.
பொதுவாக கோவில்கள் என்றாலே அர்ச்சனை அபிஷேகம் நைவேத்தியம் என பல வகையான சிறப்பு ஆராதனைகள் செய்யப்படும். அதில் கடவுளுக்கு நைவேத்தியமாக பழங்கள் உணவை படைப்பது நம்முடைய வழக்கம். ஆனால் இந்த ஒரு கோவிலில் மட்டும் உணவு பழங்களையெல்லாம் தாண்டி ஆவியை நைவேத்தியமாக படைக்கின்றனர். அப்படி இந்த கோவிலில் என்னென்ன சிறப்புகள் இருக்கிறது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் வட்டத்தில் வெள்ளாற்றங்கரையில் ஆவுடையார் கோவில் எனும் திருப்பெருந்துறை திருத்தலம் அமைந்திருக்கிறது. புதுக்கோட்டையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் இத்திருத்தலம் உள்ளது. இக்கோவிலில் மூலவராக ஆத்மநாதசுவாமி ஆவுடையாரும் தாயாராக யோகாம்பாளும் அருள்பாலித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் அன்னத்தின் ஆவியே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இக்கோவில் திருப்புகழ் பெற்ற ஆலயம் என ஈடு இணையில்லாப் பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது.
