Home Uncategorized ஆயிரம் ரூபாய் “ஹட்செட்” திருடியதாக இளம்பெண்ணை சிறையில் அடைத்த நெஞ்சை உருக்கும் சம்பவம்

ஆயிரம் ரூபாய் “ஹட்செட்” திருடியதாக இளம்பெண்ணை சிறையில் அடைத்த நெஞ்சை உருக்கும் சம்பவம்

குரோம்பேட்டை சரவணா ஸ்டோரில் பணிபுரியும் பெண் ஒருவர், ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புளுடூத் ஹெட்செட்  திருடியதாக  கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அடுத்த குரோம்பேட்டை சரவணா ஸ்டோரில் 
2 ஆண்டுகளாக பணி புரிந்து வந்த இளம் பெண் பிரியா 20 (பெயர் மாற்ற்ப்பட்டுள்ளது) அங்குள்ள 7 வது மாடியில் பணிபுரிந்து வருகிறார். 

அவர் பணியின் போதே புளூடூத் ஹெட்செட்,  ஆயிரம் மதிப்புள்ள பொருளை திருடியதாக அதே பகுதியில் மேற்பார்வையாளராக பணி செய்யும் மூர்த்தி என்பவர் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து பிரியாவை கைது செய்த போலீசார் தாம்பரம் குற்றவியல் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

 இளம் பெண் ஒருவர் மீது ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருளுக்காக  நிர்வாகம் தரப்பில் புகார் அளித்து கைது செய்யப்பட்ட நிகழ்வு சக ஊழியர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

திருடுவது குற்றம் என்றாலும் அவருடைய ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு பணிநீக்கம் செய்து இருக்கலாம்.

 கைது நடவடிக்கை என்பது கொஞ்சம் ஓவர் தான்…நமது நாட்டில் ஏழைகள் என்றால் சட்டம் தன் கடமையை சரியாக செய்யும்.

 

Exit mobile version