நாட்டரசன் கோட்டையில் உள்ள கம்பன் சமாதி உள்ளது. அந்த இடத்தின் பெருமை குறித்து பிரபல பட்டிமன்ற புதுகை பாரதி அவர்கள் புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் பத்துநாள் தொடர்நிகழ்ச்சியின் முதல்நாளில் குறிப்பிட்டதாவது:
கம்பன் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் “மண்ணுக்கு மலர் அஞ்சலி” செலுத்துவது வழக்கம். இதற்காக ராமாயணம் சம்பந்தப்பட்ட இடங்களில் மண் சேர்த்து புட்டியில் வைத்திருப்போம். அவ்வகையில் நாட்டரசன் கோட்டையில் அமைந்துள்ளா கவியரசு கம்பனின் சமாதியுள்ள சன்னதியை ஒட்டியுள்ள சிறு குழியில் மண்ணெடுத்தோம்.
அந்த குழியில் எப்போது கை விட்டாலும் ஒரு முக்கால் அடி ஆழத்தில் மண் கிடைக்கும். எத்தனை பேர், எவ்வளவு மண் எடுக்கின்ற போதும் அந்த மண் குறைவதேயில்லை. மீண்டும் அதே அளவிலேயே மண் கூடிவிடுகிற அதிசயம் இன்றும் நிகழ்கிறது. மேலும் அந்த மண்ணை காற்று புகாத புட்டியில் அடைத்து வைத்துள்ளோம். பிற ஊர்களில் எடுத்த மண் அளவு அப்படியே இருக்கின்றன.
ஆனால் கம்பனின் சமாதியில் எடுக்கப்பட்ட மண்துகள்கள் குறைந்துவிட்டது. இது ஒரு மகா அதிசயம்! இன்னும் வருங்காலத்தில் உலகளவில் இது பேசுபடு பொருளாக ஆவது உறுதி. ஆய்வுக்குரிய விஷயமாகும். இதுவும் கலைமகள் அனுக்ரஹம் பெற்ற கம்பனின் மகிமை மகத்தானகும்.” இவ்வாறு அவர் கம்பனைப்பற்றி சிலாகித்து கூறினார்.
“இனி நாட்டரசன் கோட்டையை நோக்கி மக்கள் படையெடுப்பு அதிகமாகலாம்” என புதுகை பாரதியின் பேச்சைக்கேட்டவர்கள் கூறியபோது நம் தமிழ்மண்ணின் பெருமை நன்கு புரிந்தது.
