Home Uncategorized தலைப்புகம்பன் கழக மேடையில் முதல்முறையாக “நம்பிக்கை உரை வீச்சாளர்” ஈரோடு மகேஷ்

தலைப்புகம்பன் கழக மேடையில் முதல்முறையாக “நம்பிக்கை உரை வீச்சாளர்” ஈரோடு மகேஷ்

புதுக்கோட்டை கம்பன் கழக 49 ஆம் ஆண்டுவிழா 10 நாள் நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருவது அறிந்த செய்தி. இவ்விழாவின் 5 ஆம் நிகழ்ச்சியின் முதல் பகுதியாக, எழுச்சி உரையானது நேற்று (16/07/2024) அன்று விழாக்குழு உறுப்பினர் திரு.என்.  செல்லத்துரை அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, புதுக்கோட்டை செந்தில் மருத்துவமனை அதிபர் திரு.எஸ். சுப்பைய்யா அவர்கள் தலைமையில் தொடங்கியது.

புதுகை வைரம் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி திரு. அரு. ச. சுப்ரமணியன் அவர்கள் வாழ்த்துரை வழங்க, மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கத்தலைவர் திரு. சண்முக பழனியப்பன் அவர்கள்,  ஆதிகாலத்து அலங்கார மாளிகை திரு.அ.பா.மணிகண்டன், மாவட்ட ரோட்டரி முன்னாள் ஆளுநர் திரு. ஏ.எல்.சொக்கலிங்கம், சாய் சேவா பவுண்டேஷன் திரு.ஜே.பி.ஆர். சுப்ரமணியம் (பெல்) , மாவட்ட அறிவியல் இயக்கத்தலைவர் திரு.எம்.முத்துக்குமார், கறம்பக்குடி வியாபாரிகள் சங்கத்தலைவர் திரு. ஏ.கே.சாந்தீய மூர்த்தி, கறம்பக்குடி வர்த்தகர் சங்கத்தலைவர் திரு.டி.ஜெகநாதன், கறம்பக்குடி வர்த்தகர் சங்கத்தலைவர் திரு.கே.கருப்பைய்யா, கந்தர்வக்கோட்டை வர்த்தகர் சங்கத்தலைவர் திரு. பழ. ஆர்.மாரிமுத்து,  பரம்பூர் வர்த்தகர் சங்கத்தலைவர் ஹாஜி. எம்.மமுகமது பாரூக், கூட்டுறவு சங்க செயலாளர் மு.வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகிக்க, “இன்றும் என்றும் கம்பன்” என்கிற தலைப்பில்  முனைவர். ஈரோடு. மகேஷ்  அவர்கள் “நம்பிக்கை உரை” ஆற்றினார். 

Exit mobile version