Home Uncategorized சென்னை கிண்டியில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

சென்னை கிண்டியில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

வெள்ளையனை எதிர்த்து அவனுடைய ஆதிக்கம் ஒடுக்கப்படவேண்டும்,முற்றிலுமாக நம்முடைய தாய் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற வகையில் ஆதிக்க சக்தி மிகுந்த வெள்ளைய ஏகாத்திபத்தியத்தை எதிர்த்து,எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் போரிட்டு அவர்களைப் புற முதுகிட்டு ஓடச் செய்தவர் தீரன் சின்னமலை.அவர் கோட்டையைக் கட்டி அதில் கொடியேற்றி வெள்ளையனின் ஆதிக்கத்தை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்று ஒடாநிலை கோட்டையைக் கட்டியவர் தீரன் சின்னமலை.அவரிடம் நேருக்கு நேர் மோத முடியாது,அவரோடு மோதினால் நாம் வெற்றி பெற முடியாது என்று உணர்ந்த வெள்ளையர்கள் சூழ்ச்சியால் தீரன் சின்னமலையை கைது செய்து தூக்கிலிட்டு அவரை கொன்றார்கள். 17 ம் நூற்றாண்டிலே இந்தியச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் வெள்ளையனை எதிர்த்து போரிட்டு மறைந்த அந்த மாவீரனின் நினைவுதினம் இன்று. இந்த தினத்தில் அவரின் புகழை இந்த உலகம் உள்ளவரைப் போற்றும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு.

கேள்வி…ஆவின் பால் நிறுவனத்தில் முறைகேடு நடந்துள்ளது என்றும்,குறைந்த அளவு பால் தரப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதே
பதில் :   விஞ்ஞான பூர்வ ஊழல் செய்து சர்காரிய கமிஷனால் குற்றவாளி என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள்.அறிவியல் பூர்வமாக ஊழல் செய்வது என்பது இவர்களுக்குக் கைவந்த கலை. அதுவும் குறிப்பாக அமைச்சர் நாசர் தன்னுடைய முன்னோர்கள் வழியில் அதாவது விஞ்ஞான வழியிலே பால் பாக்கெட்டில் உள்ள பாலை திருடி,அதன் மூலம் ஆதாயம் தேடியவர் தமிழகம் முழுவதும் 37 லட்சம் பால் விற்பனை ஆகிறது. அதில் தினந்தோறும் 5.50 லட்சம் லிட்டரை நாசர் என்ற பூனைக்குட்டி குடித்துவிட்டது. பூனைக் குட்டி குடித்த பாலின் விலை எவ்வளவு. ஒரு நாளைக்கு 2 கோடியே 40 லட்சம். அரை லிட்டர் பால் பாக்கெட்டில் 2 கிராம் கவரை கழித்துவிட்டால் மீதி 515 கிராம் இருக்கவேண்டும். ஆனால் 430 கிராம்தான் அதில் உள்ளது.. மீதி 75 கிராம் பால் அரை லிட்டரிலே குடித்துவிட்டார்கள்.  ஒரு நாளைக்கு 2 கோடியே 40 லட்சம் என்றால் வருடத்திற்கு  800 கோடி லிட்டர் பாலை பூனை நாசர் குடித்துவிட்டு ஏப்பம் விட்டுள்ளது.விசாரணை செய்யவேண்டும் என்றாலே தவறு நடந்துள்ளது என்றுதானே அர்த்தம்.நீதிபதி தலைமையில் விசாரணையை வைத்து நாட்டு மக்களுக்கு உண்மை நிலையைத் தெரிவிக்கவேண்டும். ஆனால் துறை ரீதியான விசாரணை என்பதில் எந்தவிதத்திலும் நியாயம் கிடைக்காது. இப்படி விஞ்ஞான பூர்வமான ஊழல் செய்வது மட்டுமல்லாமல் மக்களுக்கு வழங்குகின்ற பாலிலைக்கூட திருடுகின்ற நிலைதான்  இந்த ஆட்சியில் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

கேள்வி : அதிமுக தலைவர்களைச் சிறுமைப்படுத்தும் வகையில் பேசியுள்ள சீமான் கருத்து தெரிவித்துள்ளாரே

பதில் : சீமான் தனது கட்சி குறித்து எப்படி வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். இதில் எங்களுக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை.அதேபோல ஆளும் திமுக அரசு சர்வாதிகார போக்குடன் நடந்துவருகிறது. முதல்வர் ஸ்டாலின்  தனது தந்தைக்கு ஊரெங்கும் சிலை வைத்து அரசின் கஜானாவை காலிசெய்துவருகிறார்.அது குறித்து அவர் விமர்ச்சனம் செய்யட்டும். கடலில் பேனா வைத்தால் மீனவர்கள் முழுமையாகப் பாதிக்கப்படுவார்கள். மீனவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அன்றாட காட்சிகள். கடல் நடுவில் பேனாவை வைக்கும்போது மீனவர்கள் வாழ்வாதாராம் முற்றிலும் பாதிக்கப்படுகின்ற  நிலை உள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் இங்கு வெள்ளையன் வருவதற்கு முன்பு சிறிய மீன்பிடி கிராமாகத்தான் இருந்தது.இவர்கள் பாரம்பரிய மீனவர்கள்.நெச்சிகுப்பம்,மாட்டான்குப்பம்,நடுங்குப்பம்,டூமிங்குப்பம்,டூமிங்நகர்,நொச்சிநகர்பட்டினப்பாக்கம் போன்றவை எல்லாம் சென்னையின் அடையாள சின்னங்கள். இன்றைக்கும் கடற்கரையில் கட்டுமரத்தை வைத்துப் பார்க்கும்போது சென்னையின் பாரம்பரியம் தெரியும்.அதனை மறைக்கவேண்டும் என்பதற்காகவும்,மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படவேண்டும் என்பதற்காகவும் இந்த பணி செய்யப்படுகிறது.கடல் நடுவே பேனாவை வைக்கவேண்டிய அவசியம் என்ன. ஒருவருடைய வாழ்வாதாரத்தை அழித்துத்தான் இதனை அமைக்கவேண்டுமா. அறிவாயலத்தில் பேனா சின்னத்தை வையுங்கள் உங்கள் அறக்கட்டளையின் பணத்தைச் செலவு செய்யுங்கள். கடல் நடுவில் பேனாவை வைத்து தயவுசெய்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கவேண்டாம்.மீனவர்களின் அடையாளத்தை அழிக்கவேண்டாம். இதனை எல்லாம் ஏன் சீமான் சொல்லவில்லை.இதனை எல்லாம் சொல்லாமல் மறைந்த தலைவர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசினால் எப்படி.புரட்சித்தலைவர் இன்று அல்ல.,.நாளை அல்ல உலகம் முழுவதும் என்றும்  போற்றப்படக்கூடிய தலைவர். அவருக்கு நினைவுச் சின்னம் தொப்பியும்,கண்ணாடியுமாம். தமிழன் ஏற்றம் பெறுவதற்கும், தலை நிமிர்ந்து நிற்பதற்கும் காரணம் அண்ணா. அவருடைய நினைவுச் சின்னம் மூக்குப்பொடி டப்பா என்பதா. அம்மாவைப் பொறுத்தவரையில் உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்ட மாபெரும் தலைவர். தங்கதாரகை அவர்கள்.இன்றைக்கும் உலகம்  முழுவதும் போற்றப்படக்கூடிய உத்தம தலைவர் அவர். அம்மாவுக்கு மேக்கப் செட்டாம். சீமானுக்கு எவ்வளவு வாய் கொழிப்பு இருக்கிறது பாருங்கள்.
இந்த வாய்க்கொழுப்பைத் தயவு செய்து திமுகவிடம் காட்டுங்கள். அதிமுகவிடம் காட்டாதீர்கள். காட்டினால் பின் விளைவுகளை கடுமையாக இருக்கும். உங்களுக்குப் பிற்காலத்தில் உங்கள் கட்சியினர் சிலை வைக்கவேண்டும் என்றால் நீங்கள் இலங்கைக்குச் சென்று ஆமை கறியைச் சாப்பிட்டீர்களே அதன்படி ஆமையைத்தான் வைப்பார்களா. இதான் எல்லோருடைய கேள்வி இன்றைக்கு எனவே தயவு செய்து அதிமுகவுடன் விளையாட வேண்டாம். எங்களுடைய தலைவர்களை சீண்டிபார்ககவேண்டாம். சீண்டினால் அதனால் கடும் விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும்.

கேள்வி : முதல்வரின் மருமகன் திருச்செந்தூர் கோயிலில் யாகம் நடத்துவதற்கு பாஜாகா பிரமுகரை அழைத்துச் சென்றதாகத் தகவல் வருகிறதே.

பதில் :  விலங்கு மீன் பாம்புக்குத் தலையை மட்டும் காண்பிக்குமாம். மீனுக்கு வாலை காண்பிக்கும். பாம்புக்கும் தலையும்,மீனுக்கு வாலும். இதுதான் திமுகவின் இரட்டை வேடம். ஆதிகாலத்திலிருந்து இப்படிதான் உள்ளது. இந்திராகாந்தியைக் கடுமையான விமர்சனம் செய்துவிட்டு நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்றார்கள்.பாஜகவுடன் எந்த காலத்திலும் உறவு இல்லை என்றார்கள். ஆனால் 1999 ல் அவர்களுடைய அமைச்சரவையில் 5 வருடம் இருந்தார்கள். இவர்கள் சந்தர்பவாதிகள்.நிறம் மாறும் பூக்கள் இவர்கள்.சந்தர்ப்பவாதத்தின் ஒட்டுமொத்த உருவம்தான் திமுக.

கேள்வி : அரசியல் கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கு எடப்பாடி கே.பழனிசாமிக்கு இணை ஒருங்கிணைப்பாளர் என்றுதான் கடிதம் அனுப்பபட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவிக்கின்றனரே
பதில் : எங்களைப் பொறுத்தவரையில் அதிமுக சார்பில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் சார்பில் நானும், பொள்ளாச்சி ஜெயராமனும் கலந்துகொண்டோம். அவர்கள் எந்த கட்சி என்றே எங்களுக்குத் தெரியாது. ஒருவேளை சுயேச்சியாககூட இருக்கலாம். இதனைப் பற்றி நாங்கள் கவலைப்படதேவையில்லை.இந்த விவகாரத்தை எல்லாம் நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் பேசிக்கொள்வோம்.

கேள்வி: கனல் கண்ணன் பெரியார் சிலையை உடைக்கவேண்டும் என்று மேடையில் பேசியுள்ளாரே.

பதில் :  எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என்ற வகையில் பாடுபட்டவர்கள் அண்ணா,பெரியார். அதேபோல புரட்சித்தலைவர்,புரட்சித்தலைவி அம்மா. இவர்களுடைய புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் அதேபோல அவர்களுடைய திருவுருவ சிலைக்குச் சேதம் விளைவிக்கின்ற அந்த செயல்களைச் செய்தால்  இந்த ஆளும் திமுக விடியா அரசு இரும்புக் கரம் கொண்டு அடங்கி ஒடுக்கவேண்டும். இதுதான் எங்களின் வேண்டுகோள். எங்கள் ஆட்சியாக இருந்தால் இரும்புக் கரம் கொண்டு அடக்கி ஒடுக்குவோம். இவர்கள் தந்தை பெரியார் வழி,அண்ணா வழி என்று சொல்கிறார்கள். பெரியாருக்கு இழுக்கு என்று சொன்னால் உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை,வேண்டுகோள்.

கேள்வி : பண்ருட்டி ராமச்சந்திரன் சசிகலாவைச் சந்தித்த பின்னர் எடப்பாடியாரை கடுமையாக விமர்ச்சனம் செய்துள்ளாரே.அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா

பதில் : நடவடிக்கை குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். அவருடைய கருத்துக்கு எடப்பாடியார் பதில் சொல்லிவிட்டார்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

Exit mobile version