சென்னை நகரெங்கும் காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்பட்டதால், 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, கிலோ 100 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டது. அதேபோல, வெங்காயம் 90 ரூபாய்; மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்தது. சில இடங்களில் பால் தட்டுப்பாட்டை தொடர்ந்து, அரை லிட்டர், 35 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
மேலும், 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேன் குடிநீர், 50 ரூபாய் வரை விலை உயர்ந்தது. இவ்வளவு விலை உயர்ந்தாலும், ஆவின் பால் தட்டுப்பாடு நிலவியது. மழைக்கு முன் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்தாலும், மக்களின் அத்தியாவசிய பொருட்களின் மீது கவனம் செலுத்துவதில் கோட்டை விட்டுள்ளது.
குறிப்பாக, அரசு நடத்தும் ஆவின் பாலுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே, ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். காய்கறிகளின் தட்டுப்பாட்டை குறைப்பதுடன், அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
