தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளின் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வரும் ஜூன் 22ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும். அதிகபட்ச வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

