விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் ‘மெட்ராஸ் ஐ’ எனக் கூறப்படுகிறது.
இது காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவக்கூடும். இந்நிலையில் சென்னையில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகரித்துள்ளன. இது 5 நாட்களில் குணமாகக் கூடியது என்றாலும் அலட்சியமாக இருந்தால் பார்வை கூட பறிபோக வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
