Home Uncategorized சென்னையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

சென்னையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

மதுரை – பெங்களூரு, சென்னை – நாகர்கோவில் வழிதடங்களில் புதிய வந்தே பாரத் ரயில்களை, ஜூன் 20ல் பிரதமர் மோடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தொடங்கி வைக்கிறார்.

புதிய ரயில்கள் தவிர, மேலப்பாளையம்- -திருநெல்வேலி, ஆரல்வாய்மொழி–நாகர்கோவில், நாகர்கோவில் டவுன், -ஜங்ஷன்– கன்னியாகுமரி புதிய இரட்டை ரயில் பாதையையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மதுரை – பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஓசூர், வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த புதிய வந்தே பாரத் மூலம் திருச்சி பயணிகளும் விரைவாக பெங்களூரு செல்ல இயலும்.

பிரதமர் மோடி துவக்கி வைப்பதன் மூலம் மதுரைக்கு ஒரே நேரத்தில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் கிடைக்கின்றன.

Exit mobile version