Wednesday, March 11, 2026
HomeUncategorizedசிறப்பு பூஜைக்குப் பின் பிரதமர் மோடியிடம் செங்கோல் ஒப்படைப்பு!

சிறப்பு பூஜைக்குப் பின் பிரதமர் மோடியிடம் செங்கோல் ஒப்படைப்பு!

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல், பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்கள் பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கினர். செங்கோலை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, ஆதீனங்களிடம் வாழ்த்து பெற்றார்.

“இந்தியாவின் பாரம்பரிய சின்னமான #செங்கோல் #புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்படுவதில் மகிழ்ச்சியடைகிறேன். நாம் கடமையின் பாதையில் நடக்க வேண்டும், பொதுமக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதை செங்கோல் நினைவூட்டிக் கொண்டே இருக்கும்” செங்கோல் விழாவில் பிரதமர் மோடி உரை

பிரதமருக்கு திருநீறு அணிவிப்பு..!

“திருமுகம் கருணை காட்டத் திருக்கையால் நீறுகாட்டி” என நாடாளும் பாண்டிய அரசருக்கு திருஞானசம்பந்தர் திருநீறு பூசியதைப் போல, பாரத தவப்பிள்ளை மோடிக்கு திருநீறு பூசி ஆசிர்வதித்தார் 27வது தருமை ஆதீன குருமகா சந்நிதானம்.

 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments