பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், தனியார் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்துவந்தார். அங்கு அடிக்கடி பெட்ரோல் நிரப்ப வந்த 17 வயது சிறுவனுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்ளலாம் என சிறுவனிடம் ஆசை வார்த்தை கூறி, பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று இளம்பெண் கட்டாய திருமணம் செய்துள்ளார்.
இதுபற்றி அறிந்த சிறுவனின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, இளம்பெண் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீஸார், அவரை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

