Home Uncategorized சபரிமலையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்

சபரிமலையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. இதனால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

நேற்றும் அதிகாலை முதலே சன்னிதானத்தில் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்தனர். அதிகாலை 3 மணிக்கு நடை திறந்தபோது பக்தர்கள் வரிசை சரங்குத்தியையும் தாண்டி மரக்கூட்டம் வரை காணப்பட்டது.

அதிகாலை 2 மணிக்கு வரிசையில் நின்ற பக்தர்களால் 8 மணிக்குப் பின்னரே தரிசனம் செய்ய முடிந்தது.

பக்தர்கள் வருகை அதிகரித்ததால் நேற்று மரக்கூட்டத்தில் இருந்து சிறிய சிறிய குழுக்களாக போலீசார் அனுப்பி வைத்தனர்.

Exit mobile version