ஆண்டும் ஜனவரி 24 ஆம் தேதி சர்வதேச கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் கல்வியின் முக்கியத்துவத்தினை உணரவைக்கும் வகையிலும், அதனை எடுத்துரைக்கும் வகையிலும் 59 நாடுகளின் ஒருங்கிணந்த முடிவால் நடைமுறைக்கு வந்துள்ளது.
அறிவு என்பது கொண்டு வந்ததல்ல, வளர்த்துக்கொண்டது. அனுபவத்தால் விரிவுபடுத்திக்கொண்டது. இன்று திரும்பிப் பார்க்கையில் ஒன்று புரிகிறது. வாழ்க்கையில் எல்லாமே யாரிடமோ கற்றவையே. நாம் பயணிக்கும் பாதையில் மனிதர்கள், மரங்கள், நிகழ்வுகள் என எதையாவது அனுப்பிக் கற்பித்துக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை. கற்றல் தொடரும் போதுதான் வளர்ச்சி வருகிறது, வாழ்வு உயர்கிறது. இந்த ஒரு பின்னணியில்தான் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 24 ஆம் தேதி அனைத்துலக கல்வி தினம் கொண்டாடப்படுகிறது.
கல்வியின் முக்கியத்துவத்தினை உணரவைக்கும் வகையிலும், அதனை எடுத்துரைக்கும் வகையிலும் நாடுகளின் ஒருங்கிணந்த முடிவால் நடைமுறைக்கு வந்துள்ளது இந்நாள். 2018ஆம் ஆண்டு டிசம்பர் 3, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் 2019ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாக்கும்.
