சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தி.மு.க., பைல்ஸ்-3 வெளியிடப்படும். இதில் திமுக மட்டுமல்லாது தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் எடுத்த டெண்டர்கள், சம்பாதித்த லாபங்கள் அம்பலப்படுத்தப்படும்’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
திருச்சியில் அவர் அளித்த பேட்டியில் ஒரு பகுதி பைல்ஸ்-3ல் கூட்டணி கட்சிகள் குறித்து கவர் பண்ணலாம் என்று இருக்கிறோம். கூட்டணி கட்சிகளும் தப்பித்து போக கூடாது. தமிழகத்தில் வரும் பல டெண்டர்கள் கூட்டணி கட்சிகள் எடுத்து கொள்கிறார்கள்.
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி வந்த பிறகு, 3 ஆண்டுக்கால டெண்டர் குறித்து ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம். இது குறித்து 2025ம் ஆண்டு மக்கள் மன்றத்தில் வைக்க போகிறோம். பைல்ஸ் 1 மற்றும் 2ஐ விட பைல்ஸ் 3 தான் மிகப்பெரிய விஷயமாக இருக்கும். இதை மக்கள் பார்த்தாலே .
இவ்வளவு கோடி டெண்டரை உள்ளூர் அமைச்சரின் மச்சான் எடுத்து இருப்பது தெரிந்துவிடும்.
