Home Uncategorized சூரசம்ஹாரம் – ஒரு ப்ளாஷ்பேக்

சூரசம்ஹாரம் – ஒரு ப்ளாஷ்பேக்

பொதுவாகவே தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சச்சரவோ போரோ ஏற்பட்டால் அதன் முடிவு தேவர்கள் பக்கமே சாதகமாக அமைவது வழக்கம்.

இது அசுர குலத்திற்கு அவமானமாக இருந்து வந்தது. இந்ந்நிலையில், அவர் ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி, அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார் ”அசுரேந்திரந்திரன் – மங்களாசினி” தம்பதியரின் மகளான சுரசை தம்பதியரின் மகளுக்கு ”மாயை” என பெயர் சூட்டி வித்தைகள் அனைத்தையும் கற்றுக்கொடுத்தார்.

அவரது லட்சியமே அசுரர்களின் குலம் தழைக்க வேண்டும் என்பதே. அதற்காக பருவ வயதை எட்டிய ”மாயை”க்கு சில ஆலோசனைகளை குரு சுக்ராசாரியார் கூறினார்.

அதன்படி, மிகவும் சாந்த சொரூபியும், தர்மத்தின் வழியில் வாழ்ந்தவருமான காசியப முனிவருடன் கூடி குழந்தைகளைப் பெற்று, தேவர்களை பூண்டோடு அழித்து அசுரகுலத்தை தழைக்கச்செய்ய வேண்டுமென்பதே சுக்ராச்சாரியரின் ஆழ்மனத் திட்டமாகும்.

இத்திட்ட்த்தின் அடிப்படையில் ஒரு அடர்ந்த காட்டில், மாயை சொகுசான அரண்மனை அமைத்து காசியப முனிவருக்காக காத்திருந்தாள் .

அதன்படியே அவரும் வந்து சேர்ந்தார். மாயையின் அழகில் மயங்கினார். அதனால் மாயையின் யோசனையின்படி வயது முதிர்ந்த காசியப முனிவர் இளம்ராஜகுமாரனைப்போன்று உருமாறி, ஏதேதோ பேசி, மாயையை மணந்து அவளுடன் தாம்பத்யத்தில் ஒன்று கூடினார்.

அதன் விளைவாகப் பிறந்தவன் தான் “சூரபத்மன்”. இதுமட்டுமின்றி, காசியபர் – மாயை இருவருக்கும் 30 ஆயிரம் அசுர வீரர்களும், சிம்ம பத்ரன் என்பவன் தலைமையில் 40 ஆயிரம் வீரர்களும், யானை முகம் கொண்ட தாரகாசுரன் தலைமையில் 40 ஆயிரம் வீரர்களும், ஒரு ஆட்டின் முகம் கொண்டு கஜாமுகி என்ற அசுரப்பெண்ணின் தலைமையில் 30 ஆயிரம் வீரர்களும் பிறந்தனர். ஒருநாள் காசியப முனிவர் தனது மூத்த மகன் சூரபத்மன் தலைமையில் அனைத்து குழந்தைகளையும் அழைத்து, ”நீங்கள் அனைவரும் சிவனை நோக்கி தியானிக்க வேண்டும்.

அறவழியில் மட்டுமே செல்ல வேண்டும். ஜீவராசிகள் அனைவரிடத்திலும் பாரபட்சமில்லா பேரன்பு காட்ட வேண்டும்.” என்று அறிவுரை வழங்கினார். இது அவரது மனைவி மாயைக்கு அறவே பிடிக்கவில்லை. அவள், ”நீங்கள் அனைவரும் சிவனை நோக்கி தவமிருங்கள்.” என்று கூறி ஊக்கப்படுத்தினாள். ஒருநிலையில் தனக்கு வரம்வேண்டி தற்கொலை செய்ய முனைந்தான். இதைக்கண்டு இவன் மனமிரங்கினார்.

அவன் முன்னே தோன்றினார். அதன்படி தனது சக்தியைத்தவிர வேறெந்த சக்தியாலும் சூரபத்மன் சகோதர்களுக்கு அழிவு நேராது” என வரம் தந்தருளினார் சிவன். இதன்பின்னரே அசுரகுலத்தின் ஆட்டம் அதிகரித்தது. பிரம்மாவும், விஷ்ணுவும் கூட தங்களின் படைத்தல் காத்தல் தொழில்களை செய்ய இயலாமல் போனது. எல்லோரும் இவனிடம் முறையிட்டனர்.

சூரபத்மனுக்கு முடிவு கட்ட சிவபெருமான் திருவுளம் கொண்டார். தனது நெற்றிகண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை பிரசவித்தார். அவை சரவணப் பொய்கையில் விழுந்து ஆறுகுழந்தைகளாக உருபெற்று, அவை கார்த்திகைப்பெண்கள் ஆறு பேரால் வளர்க்கப்பட்டனர். அந்த குழந்தைகளை பார்வதிதேவி ஒருசேர அணைத்ததால் அவை ஆறுமுகத்துடன் ஒரே குழந்தையானது.

அதனால் அந்த குழந்தை ஷண்முகம் என பெயர் பெற்றது. இந்த ஷண்முகமே சுப்ரமணியன், கந்தன் என்றெல்லாம் தமிழ்க்கடவுள் திருமுருகன். இந்த திருமுருகக்கடவுளே வீரபாகு எனும் தனது சேனாதிபதியின் தலைமையில் படைதிரட்டி சூரபத்மனை எதிர்த்து போருக்குச் சென்றார்.

சூரபத்மனின் உடன் பிறப்புகளான சிம்மமுகம் கொண்ட சிம்ம பத்ரன், யானைமுகம் கொண்ட தாரகன், ஆட்டின் முகம் கொண்ட கஜாமுகி என ஒவ்வொருவர் தலைமியிலும் போரிட்டு அசுரப்படை தோல்வியே கண்டது. இறுதியில், சூரபத்மன் நேரிடையாக களமிறங்கிறான். போர் கடுமையாக நடந்தது. சூரபத்மன் சளைக்காமல் போரிட்டான். ஒருகட்டத்தில் ஒரு மாமரமாக தன்னை மாற்றிக்கொண்டு மாயஜாலம் செய்தான் சூரபத்மன்.

முருகன் “சிக்கல்” திருத்தலத்தில் தன் தாய் அளித்த சக்திவேலை மாமரமாக நின்ற சூரனின் மீது எறிந்தார். அந்த மாமரம் இரண்டாகப் பிளந்தது. சூரபத்மன் ஆன்மாவின் வேண்டுகோளை ஏற்று, பிளக்கப்பட்ட மாமரத்தின் ஒரு பகுதியை தனது சேவற்கொடியாகவும், நீலமயிலை தன் வாகனமாகவும் ஏற்று, ”எதிரிக்கும் இரக்கம்காட்டும் நற்பண்பு காட்டினான் தமிழ்க்கடவுள் திருமுருகன்.”

இதுவே சூரசம்ஹாரம் என்றழைக்கப்படுகிறது. சூரபத்மனின் வதம் நிகழ்ந்தது திருசெந்தூர் திருத்தலத்தில். ஆகவே இன்றும் இத்திருத்தலத்தில் “சூரசம்ஹாரநிகழ்ச்சி” வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

Exit mobile version