Home Uncategorized சூரிய கதிர்கள் நந்தியில் பட்டு எதிரொலித்து சிவனை தரிசிக்கும் அபூர்வ நிகழ்ச்சி

சூரிய கதிர்கள் நந்தியில் பட்டு எதிரொலித்து சிவனை தரிசிக்கும் அபூர்வ நிகழ்ச்சி

மதுரை முத்தீஸ்வரர் திருக்கோயிலில் சூரிய கதிர்கள் இக்கோயிலின் நந்தியில் பட்டு எதிரொலித்து மூலஸ்தானத்தில் உள்ள லிங்க வடிவில் உள்ள சிவனை தரிசிக்கும் அபூர்வ நிகழ்ச்சி. மதுரை தெப்பக்குளத்தில் உள்ள முத்தீஸ்வரர் கோயிலில் சூரியக் கதிர்கள் வரும் மார்ச் 23 ம்தேதி வரை காலை 6.35 மணி முதல் 6.45 மணி வரையும் இந்நிகழ்வு நடைபெறுகிறது

இக்கோயில் ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள கோயிலுக்கு இணையானதாகும். திருமலை நாயக்கரின் தம்பி முத்துவீர நாயக்கரால் 1623ல் இக்கோயில் கட்டப்பட்டது. வழிபட்டால் முக்தி தரும் இக்கோயில் சிவனை இன்றும் ‘ஐராவதரேஸ்வரர்’ என்கின்றனர்.

சூரியக் கதிர்கள் சிவனை தரிசிக்கும் துர்வாச முனிவர் சாபத்தால் இந்திரனின் ஐராவத யானை பூலோகம் வந்தது. மதுரையில் இக்கோயில் சிவனை வழிபட்டதால் சாபம் நீங்கிட, யானையோ தம்மை மறந்து இங்கேயே தங்கி விடுகிறது.

தன் யானையை தேடி அழைத்து வரும்படி இந்திரன் கதிரவனை அனுப்பி வைக்கிறார். இக் கோயிலை கதிரவன் தேடி வந்து, இந்திரனின் யானையை அழைத்துச் சென்றதாம்.இத்தகைய நிகழ்வை நடத்திய இறைவனை நாமும் சென்று வழிபட்டு இறையருள் பெறுவோம்.

Exit mobile version