Home செய்திகள் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஐஏஎஸ் – ஐபிஎஸ் உயர் அதிகாரிகள் மாநாடு தொடக்கம்!

முதலமைச்சர் விஜய் தலைமையில் ஐஏஎஸ் – ஐபிஎஸ் உயர் அதிகாரிகள் மாநாடு தொடக்கம்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில், மாநிலத்தின் மிக முக்கியமான ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் உயர் அதிகாரிகளின் மாநாடு துவங்கியது .

தலைமைச் செயலகத்தில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இந்த உயர் மட்ட மாநாட்டில், மாநில அரசின் நிர்வாகத் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது, மக்கள் நலத்திட்டங்கள் கடைகோடி மனிதனுக்கும் தடையின்றிச் சென்றடைவதை உறுதி செய்வது மற்றும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலவரத்தைக் கூடுதல் கவனத்துடன் பாதுகாப்பது குறித்து மிக விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஒவ்வொரு துறையின் தற்போதைய செயல்பாடுகள், மாவட்ட வாரியாக நிலுவையில் உள்ள முக்கியத் திட்டங்களின் நிலவரம் மற்றும் காவல்துறை ரீதியாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த இரண்டு நாள் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்படவிருக்கின்றன.

அரசு நிர்வாகத்தை இன்னும் எளிமையாக்கி, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உடனடியாகத் தீர்வு காண்பதற்கான புதிய உத்திகள் மற்றும் வழிகாட்டுதல்களை இந்த மாநாட்டில் முதலமைச்சர் வழங்கவுள்ளார்.

Exit mobile version