Home செய்திகள் ஸ்ரீரங்கம் கோபுரத்தின் திருப்பணி ஆய்வில் ஷூ அணிந்து சென்ற அமைச்சர் ரமேஷ் வலுக்கும் கண்டனங்கள்!

ஸ்ரீரங்கம் கோபுரத்தின் திருப்பணி ஆய்வில் ஷூ அணிந்து சென்ற அமைச்சர் ரமேஷ் வலுக்கும் கண்டனங்கள்!

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயில் கிழக்கு கோபுரம் திருப்பணி பார்வையிடச் சென்ற
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஷூ அணிந்து கொண்டு கோபுரத்தில் ஏறியது கண்டனத்திற்குரியது.

ராஜனுக்கு ராஜனான ரங்கராஜனின் கிழக்கு கோபுரம் திருப்பணி பார்வையிட சென்ற இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் திருக்கோயில் அதிகாரிகள் தவெக கட்சியினர் மற்றும் பலர் கை உயர்த்தி தொழும் ஸ்ரீரங்கம் ரங்கனின் கிழக்கு கோபுரத்தில் கிருஷ்ணர் சன்னதி அமைந்த இடத்திற்கு மேலே இந்து சமய நம்பிக்கையை கொச்சைப்படுத்த வகையில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அரசு அதிகாரத்தில்; அமைச்சர் என்ற எண்ணத்தில் காலில் ஷூ அணிந்து கொண்டு பார்வையிட சென்றது வன்மையான கண்டனத்திற்கு உரியது .

தன்னுடைய பெயருக்கும் புகழுக்கும் களங்கம் உண்டாக்கிட யாராவது கருத்து தெரிவித்தால் உடனடியாக புகார் கொடுக்கக்கூடிய திரு ரமேஷ் அவர்கள் கோடான கோடி மக்கள் வணங்கும் அரங்கனின் கோபுரத்தின் மீது ஷூ காலுடன் சென்று பார்வையிட்டது ஏற்றுக்கொள்ள இயலாதது வன்மையான கண்டனத்திற்குரியது .

அமைச்சர் பதவி என்பது ஐந்து ஆண்டுகள் தான் அதிகார மமதைதியில் இதற்கு முன்பு ஸ்ரீரங்கத்தில் இருந்த பல அமைச்சர்களின் வரலாறுகளை தற்போதைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் .

கடவுள் இல்லை என்று சொல்லும் திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூட செய்யத் துணியாத செயலை காலில் ஷூ அணிந்து கொண்டு பொறுப்பு மிக்க அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு செய்தது துளியும் ஏற்றுக் கொள்ள இயலாது .

ஸ்ரீரங்கம் அரங்கனின் வீதிகளில் காலில் செருப்பு அணியாது அரங்கனின் மீதுபக்திகொண்டபல்லாயிரக்கணக்கான பாகவத பெரியவர்களின் பக்தி உயர்வானது.

அமைச்சர் என்ற அகங்காரத்தில் காலில் ஷூ அணிந்து பார்வையிட சென்றது நாளை யார் வேண்டுமானாலும் கோயிலுக்குள் கூட செருப்பு அணிந்து செல்லலாம் என்ற தவறான முன்னுதாரணத்தை பொறுப்பு மிக்க அமைச்சர் செய்திருக்கிறார் .

இதற்கு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ரமேஷ் பொதுவெளியில் மன்னிப்புக்கு கோர வேண்டும்.

ஸ்ரீரங்கம்திருக்கோயில் நிர்வாகம் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் .

மன்னாண்ட மன்னவர்கள் பலரையும் மண்ணில் பார்த்து கிடந்த கோலத்தில் இருந்த இடத்திலிருந்து அரசாட்சி செய்யும் அரங்கனை விட இந்த அமைச்சர் ஒன்றும் பெரிய ஆள் இல்லை!!

தாசனுக்கு தாசனாய் அடியாருக்கு அடியவர் என்று இறைவன்தன்னை தாழ்த்திக் கொள்ளும் பாகவதர்கள் உயர்வானவர்கள்.

செய்த செயலுக்கு வருந்தி அரங்கனிடம் சரணடைந்தால்தான் இந்தப் பாவ செயலுக்கு அரங்கனிடம் பிராயச்சித்தம் உண்டு; இல்லையெனில் சுற்றி அடிக்கும் காற்றில் எங்கு இருப்பார் என்று இறைவனுக்கு மட்டுமே தெரியும்.

Exit mobile version