Home செய்திகள் வெயிலில் விலங்குகளுக்கு குளிர்ச்சி பாதுகாப்பு – நஹர்கர் பூங்கா நடவடிக்கை!

வெயிலில் விலங்குகளுக்கு குளிர்ச்சி பாதுகாப்பு – நஹர்கர் பூங்கா நடவடிக்கை!

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நஹர்கர் உயிரியல் பூங்காவில் (Nahargarh Biological Park) வனவிலங்குகளை வெப்பத்திலிருந்து பாதுகாக்க வனத்துறை சிறப்பான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

பூங்காவில் உள்ள விலங்குகளின் இருப்பிடங்களில் வெப்பத்தைக் குறைக்க ராட்சத கூலர்கள் (Jumbo coolers) மற்றும் தண்ணீர் தெளிப்பான்கள் (Sprinklers) நிறுவப்பட்டுள்ளன.

மேலும், விலங்குகளின் உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கவும், நீர்ச்சத்துக் குறைபாட்டைத் தவிர்க்கவும் அவற்றின் உணவு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, குளிர்ச்சி தரும் பழங்கள் மற்றும் நீர்ச்சத்துள்ள உணவுகள் அதிகளவில் வழங்கப்படுவதோடு, விலங்குகளுக்குத் தடையின்றித் தண்ணீர் கிடைப்பதையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Exit mobile version