நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திப் பல்வேறு வழக்குகளைச் சந்தித்து வரும் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ அமைப்பைச் சேர்ந்த மாணவர்களின் சட்டப் பாதுகாப்புக்காக, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, மாணவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்குத் தேவையான இலவசச் சட்ட உதவிகளை வழங்கவும், நீதிமன்ற வழக்குகளைக் கண்காணிக்கவும் பிரத்யேக வலைத்தளம் தொடங்கப்பட உள்ள சூழலில், தாராள மனமுடைய வழக்கறிஞர்களும் இந்தச் சட்ட உதவி நிதிக்குப் பங்களிக்குமாறு கபில் சிபல் கோரிக்கை விடுத்துள்ளார்.
