Home செய்திகள் மாணவர்களுக்கான இலவச சைக்கிள் திட்டத்தில் புதிய மாற்றங்கள்! | டெண்டர் விதிகளில் தளர்வு!

மாணவர்களுக்கான இலவச சைக்கிள் திட்டத்தில் புதிய மாற்றங்கள்! | டெண்டர் விதிகளில் தளர்வு!

மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி வழங்கும் திட்ட டெண்டர் நிபந்தனைகளில் தமிழ்நாடு அரசு முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ள நிலையில், மாணவிகளுக்கு ‘லைலாக் மிஸ்ட்’ (Lilac Mist) வண்ணத்திலும், மாணவர்களுக்கு ‘ஆர்மி கிரீன்’ (Army Green) வண்ணத்திலும் மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.

இதில், கடந்த 3 நிதியாண்டுகளில் குறிப்பிட்ட மிதிவண்டி மாடலில் குறைந்தது 75,000 யூனிட்களை உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்திருக்க வேண்டும் என்ற கடுமையான விதிமுறை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இரண்டு பிரிவுகளுக்கும் சேர்த்து டெண்டர் கோருவோருக்கு ஆண்டுக்கு 10 லட்சம் மிதிவண்டிகள் உற்பத்தித் திறனும், ஒரே ஒரு பிரிவுக்கு மட்டும் விண்ணப்பிப்போருக்கு ஆண்டுக்கு 5 லட்சம் மிதிவண்டிகள் உற்பத்தித் திறனும் இருக்க வேண்டும் எனத் தளர்த்தப்பட்டுள்ளது.

மேலும், மிதிவண்டியின் பிரேம் மற்றும் ஃபோர்க் தயாரிப்பு வெளிப்பணிகளுக்குக் (outsource) கொடுக்கப்படாமல் நிறுவனத்தின் சொந்தத் தயாரிப்பு மையத்திலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்றும், பிரேமில் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இலச்சினை லேசர் செதுக்கல், ஸ்டாம்பிங் அல்லது சேதப்படுத்த முடியாத ரிவெட்டிங் (tamper proof riveting) முறையில் நிரந்தரமாகப் பதிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்துடன், வழங்கப்படம் ஹெல்மெட்களுக்கு NABL/BIS அங்கீகாரம் பெற்ற ஆய்வகச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், பள்ளி ஒன்றுக்கு இரு பராமரிப்பு டூல் கிட்களை இலவசமாக வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version