Home Uncategorized ஆப்பரேஷன் சிந்தூர்: லோக்சபாவில் இன்று விவாதம்!

ஆப்பரேஷன் சிந்தூர்: லோக்சபாவில் இன்று விவாதம்!

எதிர்க்கட்சியினரின் முக்கிய கோரிக்கையான ஆப்பரேஷன் சிந்துார் பற்றி லோக்சபாவில் இன்று விவாதம் நடத்தப்படவுள்ளது.

கிட்டத்தட்ட 16 மணி நேரம் நடக்கும் இந்த விவாதத்தில், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பதில் அளிக்க உள்ளனர்.

பிரதமர் மோடியும், இந்த விவாதத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், பெரும் பரபரப்புக்கு இடையே பார்லிமென்ட் இன்று கூட உள்ள நிலையில், லோக்சபாவில் காரசார விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல், ஆப்பரேஷன் சிந்துார் விவகாரம், ராஜ்யசபாவில் நாளை சிறப்பு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version