இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட இயக்குநரும், தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.குமரன் கூறியவாறு “உங்களை விட பலம் பொருந்தியவர்கள் என்றால் 2 வருடம் பொறுமையோடு அனுமதி கேட்கும் நீங்கள், எளிய சிறிய படைப்பாளியான என்னிடம் எதேச்சதிகாரத்தோடு நடந்து கொண்டு என்னை மன உளைச்சல் ஆக்கியதற்கு நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும்” .
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்று வினாடிக் காட்சிக்காக நஷ்ட ஈடு கேட்டுத் தனுஷ் உங்கள் மீது வழக்கு தொடர்ந்ததால் வெகுண்டு எழுந்த நீங்கள், கடந்த ஆண்டு ‘LIC’ என்ற என் தலைப்பை உங்கள் கணவர் விக்னேஷ் சிவன் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதை அறிந்திருப்பீர்கள். ‘LIC’ என்ற தலைப்பு என் நிறுவனத்தின் பெயரில் இருப்பதை அறிந்த விக்னேஷ் சிவன் தன் மேலாளர் மூலம் என்னிடம் கேட்டு, நான் வழங்காத நிலையிலும் அதே தலைப்பை அவர் படத்திற்கு வைத்து விளம்பரப்படுத்தியது எந்த வகையில் நியாயம்.
