மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) முதல் மண்டல சீசன் ஆரம்பமா கிறது. டிசம்பர் 26-ந் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது.
இந்தநிலையில் மண்டல பூஜையை முன்னிட்டு தினசரி நடை திறக்கப்படும் நேரம், தினசரி பூஜை-வழிபாடுகள், நடை அடைப்பு குறித்து சபரிமலை செயல் அதிகாரி பிஜூபி.நாத் கூறியதாவது:-
அதிகாலை 3 மணி: நடை திறப்பு, நிர்மால்ய தரிசனம்,
3.30 மணி: கணபதிஹோமம்
3.30 மணி முதல் காலை 7 மணி வரை: நெய்யபிஷேகம்
7.30 மணி: உஷபூஜை
8.30 மணி முதல் பகல் 11 மணி வரை: நெய்யபிஷேகம்
11 மணி முதல் 11.30 மணி வரை: அஷ்டாபிஷேகம்
பகல் 12.30 மணி: உச்ச பூஜை
மதியம் 1 மணி: நடை அடைப்பு
பிற்பகல் 3 மணி: நடை திறப்பு
மாலை 6.30 மணி: தீபாராதனை
இரவு 7 மணி: புஷ்பாபிஷேகம்
இரவு 9.30 மணி:அத்தாள பூஜை
11 மணி: நடை அடைப்பு.
தினசரி 18 மணிநேரம் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறந்து பூஜை வழிபாடுகள் நடைபெறும். மண்டல காலத்தில் தினமும் நெய்யபிஷேகம்,அஷ்டாபிஷேகம், புஷ்பாபிஷேகம் மற்றும் களபாபிஷேகம் ஆகிய 4 அபிஷேக வழிபாடுகள் மட்டுமே நடைபெறும்.2025 ஜனவரி 14-ஆம் தேதி மகரஜோதி தரிசனமும் நடக்கிறது
இவ்வாறு அவர் கூறினார்
