Thursday, February 5, 2026
HomeUncategorizedஇயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்!

இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்!

திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் உடல்நலகுறைவால் காலமானார்(68). கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த வேலு பிரபாகரன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வேலு பிரபாகரன் இன்று பிற்பகல் 12:20 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .அவரது மறைவைக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1989 ஆம் ஆண்டு நாளைய மனிதன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு 1990 அதிசய மனிதன் திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பு ஒளிப்பதிவராக தனது வாழ்க்கையை தொடங்கினார். தமிழ் திரையுலகில் இயக்குனர், கதாசிரியர், ஒளிப்பதிவாளர், நடிகர் என பன்முகத் திறமைகளை கொண்ட இவர், தனது 60-வது வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு  சர்ச்சையில் சிக்கினார்.

 பி ஜெயாதேவி என்பவரை முதன் முதலில் திருமணம் செய்து கொண்ட  இவர் ,  அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு தன்னுடைய 60வது வயதில் நடிகை ஷிர்லே தாஸ்  என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில்  கடந்த சில நாட்களாக  உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த வேலு பிரபாகரன் இன்று மதியம் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments