சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது
இதில் இன்று இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியினை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளதை கொண்டாடும் வகையில்
கட்சியின் தொண்டர்கள் ஏராளமானவர்கள் கட்சியின் அலுவலகத்தில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் அடங்கிய பேனர் பாலபிஷேகம் செய்தும் தங்கள் மகிழ்ச்சியான வெளிப்படுத்தினார்கள்
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அப்போது அவர் பேசுகையில்
தேர்தல் ஆணையம் பொதுக்குழு செல்லும் என்று உத்தரவு வழங்கியுள்ளது உயர்நீதிமன்றம் உறுதி செய்ததாகவும் இனி சட்டமன்றத்தில் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படும் என அவர் குறிப்பிட்டார்
பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்
இன்று தேர்தல் ஆணைய அங்கீகாரம் அளித்துள்ளது ஒன்றரை கூடி தொண்டர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளர்கள் என அவர் குறிப்பிட்டார்
அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் இணைந்து கொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ளார் மற்றவர்கள் குறித்து பேசி நேரம் வீணடிக்க வேண்டாம் எனவும்
அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்கை துவங்கி உள்ளதாகவும் ஒன்று கோடியாக இருக்கும் தொண்டர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியாக உயர்த்துவது இலக்கு எனவும்
ஒற்றைய தலைமையாக என்ன தேர்வு செய்யவில்லை கட்சிக்கு ஒரு தலைமை தேவை என்பதாலே என்னை தேர்வு செய்தார்கள் அனைவரும் ஒன்றிணைந்து நான் ஒரு சாதாரண தொண்டனாகவே செயல்படுவேன் என அவர் கூறினார்
திமுக கட்சி வீட்டுக்கு அனுப்புவது எங்களது லட்சியம் எங்களது நோக்கமாக இருக்கும்
எதிர்க்கட்சி துணைத் தலைவர் தேர்வு செய்து காலம் காலமாக இருக்கும் மரபு எனவும் அதனை சபாநாயகர் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மீண்டும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை குறித்து சட்டப்பேரவையில் பேச உள்ளதாகவும்
கர்நாடகா தேர்தலில் ஒரு தொகுதியில் வேட்பாளர் நிறுத்துவதால் கூட்டணிக்குள் எந்த பிளவும் ஏற்படாது எனவும் கர்நாடக மாநில அதிமுக பிரதிநிதிகள் எங்களை வலியுறுத்தியதாலே வேட்பாளர் நிறுத்தினோம்
வேட்பாளர் நிறுத்துவது அதிமுகவின் அடையாளம் காட்டுவதற்கு தான் எனவும்
அதிமுக ஆட்சியில் இருந்தது பல்வேறு சிறப்பு திட்டங்களை கொடுத்துள்ளதாகவும்
திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு இதுவரைக்கும் எந்த திட்டத்தையும் நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சாட்டினார்
அதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட போது யார் ரவுடி கூட்டங்களுடன் வந்தது அங்க இருந்த பொருட்கள் எல்லாம் கொள்ளையடித்து யார் சென்றது என அனைவருக்கும் தெரியும் எனவும் ஓபிஎஸ் உடன் திமுக கூட்டு சேர்ந்து செயல்பட்டதாகவும்
திமுகவின் பி டீமாக ஓபிஎஸ் விளக்குகிறார் என குற்றம் சாட்டி உள்ளார்
அதிமுக அலுவலகம் எம்ஜிஆர் ஜெயலலிதா வாழ்ந்த கோவில் எனவும் இது ஒரு புனிதமான இடம் எனவும் இந்த மாளிகை யார் தவறாக நடந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அவருடைய விதி என்னவென்று அனைவருக்கும் தெரியும் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்
20.8. 2023 அன்று மதுரையில் பிரம்மாண்டமான அதிமுக மாநாடு நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்
