Sunday, March 15, 2026
HomeUncategorizedஎடப்பாடி தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டம்

எடப்பாடி தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  தலைமையில்  அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது 

 இதில் இன்று இந்திய தேர்தல் ஆணையம்  எடப்பாடி பழனிச்சாமியினை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளதை கொண்டாடும் வகையில்      

 கட்சியின் தொண்டர்கள் ஏராளமானவர்கள்   கட்சியின் அலுவலகத்தில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும்  எடப்பாடி பழனிச்சாமியின்  புகைப்படம் அடங்கிய  பேனர் பாலபிஷேகம் செய்தும்   தங்கள் மகிழ்ச்சியான வெளிப்படுத்தினார்கள்

 செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி   அப்போது அவர் பேசுகையில்  

தேர்தல் ஆணையம் பொதுக்குழு செல்லும் என்று உத்தரவு வழங்கியுள்ளது உயர்நீதிமன்றம் உறுதி செய்ததாகவும்  இனி சட்டமன்றத்தில் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படும் என   அவர் குறிப்பிட்டார்  

 பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களுக்கு  சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்  

 இன்று தேர்தல் ஆணைய அங்கீகாரம் அளித்துள்ளது  ஒன்றரை கூடி தொண்டர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளர்கள் என அவர் குறிப்பிட்டார்  

 அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் இணைந்து கொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ளார்  மற்றவர்கள் குறித்து பேசி நேரம் வீணடிக்க வேண்டாம் எனவும்  

 அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்கை துவங்கி உள்ளதாகவும்  ஒன்று கோடியாக இருக்கும் தொண்டர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியாக உயர்த்துவது  இலக்கு எனவும் 

 ஒற்றைய தலைமையாக என்ன தேர்வு செய்யவில்லை  கட்சிக்கு ஒரு தலைமை தேவை என்பதாலே  என்னை தேர்வு செய்தார்கள் அனைவரும் ஒன்றிணைந்து  நான் ஒரு சாதாரண தொண்டனாகவே செயல்படுவேன் என  அவர் கூறினார் 

திமுக கட்சி வீட்டுக்கு அனுப்புவது எங்களது லட்சியம் எங்களது நோக்கமாக இருக்கும் 

 எதிர்க்கட்சி துணைத் தலைவர்  தேர்வு செய்து காலம் காலமாக இருக்கும் மரபு எனவும் அதனை சபாநாயகர் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும்  மீண்டும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை குறித்து  சட்டப்பேரவையில் பேச உள்ளதாகவும் 

 கர்நாடகா தேர்தலில்  ஒரு தொகுதியில் வேட்பாளர் நிறுத்துவதால் கூட்டணிக்குள் எந்த பிளவும் ஏற்படாது எனவும்  கர்நாடக மாநில அதிமுக பிரதிநிதிகள்  எங்களை  வலியுறுத்தியதாலே   வேட்பாளர் நிறுத்தினோம் 
 வேட்பாளர் நிறுத்துவது   அதிமுகவின் அடையாளம்  காட்டுவதற்கு தான் எனவும்

அதிமுக ஆட்சியில் இருந்தது பல்வேறு சிறப்பு திட்டங்களை கொடுத்துள்ளதாகவும் 

திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு இதுவரைக்கும் எந்த திட்டத்தையும் நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சாட்டினார்

 அதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட போது யார் ரவுடி கூட்டங்களுடன் வந்தது  அங்க இருந்த பொருட்கள் எல்லாம் கொள்ளையடித்து யார் சென்றது என அனைவருக்கும் தெரியும் எனவும்  ஓபிஎஸ் உடன் திமுக கூட்டு சேர்ந்து   செயல்பட்டதாகவும்

 திமுகவின் பி டீமாக ஓபிஎஸ் விளக்குகிறார் என குற்றம் சாட்டி உள்ளார்  

 அதிமுக அலுவலகம் எம்ஜிஆர் ஜெயலலிதா வாழ்ந்த கோவில் எனவும் இது ஒரு புனிதமான இடம் எனவும்  இந்த மாளிகை யார் தவறாக நடந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என  அவருடைய விதி என்னவென்று அனைவருக்கும் தெரியும்  யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் 

 20.8. 2023 அன்று மதுரையில்  பிரம்மாண்டமான அதிமுக மாநாடு நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments