Home Uncategorized பாவங்கள் செய்யாதீர்..!

பாவங்கள் செய்யாதீர்..!

பாரத தேசத்தின் பண்பாடு, கலாச்சாரம் உலகிற்கே குருவாக விளங்கும் தன்மை கொண்டது. இயல்பாகவே நமது மண் புண்ணியபூமி. அதுமட்டுமின்றி மக்களை எப்போதும் நல்வழியில் பயணிக்கச்செய்யும், பாவ, புண்ணியங்களை வரையறுக்க காப்பியங்கள் சிறு சிறு புராணங்கள், கிளைக்கதைகள் என எத்தனையோ இங்கு உண்டு. அவ்வகையில், கைசிக புராணத்தில், காணப்படும் பாவங்களின் பட்டியலை இப்போது காணலாம்.

கைசிக புராணத்தில் கூறப்படும் பாவங்களின் பட்டியல் :

 உண்மை எனப்படும் சத்தியத்தினை மீறுவது
 தனது மனவியைத்தவிர வேறு ஒரு பெண்ணை அடைய முயற்சிப்பது.
 உணவு உண்ணும் இடத்தில் சுவை மற்றும் அளவுகளில் தனக்கும்
பிறருக்கும் பாரபட்சமான ஏற்பாடு செய்வது.
 ஒரு பெண்ணின் இளமைக்காலத்தில் அவள் உடல்சுகத்தை
அனுபவித்துவிட்டு, அவளின் முதுமைக்காலத்தில் தவிக்கவிடுவது.
 அமாவாசை தினங்களில் தன் முன்னோர்களுக்கு திதி கொடுத்துவிட்டு,
அன்றைய தினமே மனைவியானாலும் கூட அவளுடன் உடல்
சுகத்திற்காக கூடுவது.
 ஒருவர் அளிக்கும் உணவை உண்டுவிட்டு, அந்த உணவினை
அளித்தவனையே அவதூறாக பேசுவது.
 தன் மகளை திருமணம் செய்துதருவதாக வாக்களித்து விட்டு,
அவ்வாறு செய்துதர மறுப்பது.
 சஷ்டி, அஷ்டமி, அமாவாசை, சதுர்த்தி ஆகிய நாட்களில் (திதிகளில்)
குளிக்காமல் உணவு உண்பது.
 ஒருவருக்கு ஒரு பொருளை தருவதாக வாக்களித்துவிட்டு, அதனைத்
தராமல் ஏமாற்றுவது.
 தனக்கு மிகவும் உதவி செய்த நண்பனின் மனைவியை வசீகரித்தல்,
அபகரித்தல்.

 குருவாக இருப்பவர் தந்தைக்கு நிகரனவர். நாட்டின் அரசனும்
அவ்வாறே தந்தைக்கு நிகரானவன். ஆகவே இவர்களின்
மனைவியருடன் உடல் சுகம் அனுபவிப்பது பாவம்.
 இரண்டு மனைவியரை மணந்து விட்டு, அவர்களில் ஒருவளிடம்
மட்டும் பாசமும் தயையும் காட்டி, மற்றொருவளை
உதாசீனப்படுத்துவது.
 பதிவிரதையாக உள்ள பெண்ணின் வாழ்க்கையைக் கெடுப்பது.
 தாகம் காரணமாக தண்ணீர் குடிக்க வரும் பசுக்களுக்கு கிடைக்கக்கூடிய
அவைகளுக்கு கிடைக்க முடியாதபடி தடுப்பது.
 வேறுவேறு தேவதைகளை வணங்கியும், வாசுதேவனாகிய திருமாலை
ஆராதிக்காமல் இருப்பது.

அல்லவை கழித்து, நல்லவை ஏற்று, திருக்குறுங்குடி
பெருமாளின் பேரருள் பெறுவோம்.

Exit mobile version