வர்க்கலா, கேரளாவின் கடலோர நகரம், அதன் அழகிய கடற்கரைகளுக்கும் இயற்கையின் சூழலுக்கும் மிகவும் பிரபலமாகும், இது மினி கோவா என்று புகழப்படுகிறது. வர்க்கலாவின் கடற்கரை அதன் உயர்ந்த அலைகளுக்கும் அழகிய சூரிய அஸ்தமனத்திற்கும் பெயர் போனது, இதனாலேயே இது வெளிநாட்டவர்களை ஈர்க்கிறது. கடற்கரையில் உள்ள விடுதிகளில் இருந்து கடல் உணவுகளை ரசித்து சாப்பிடும் அனுபவம் அருமையானது.
Mangrove Village Adventure Park சதுப்பு நில காடுகள் என்பது வர்க்கலாவிலிருந்து புளச்சேரி ஏரிக்கு பயணிக்கும் இடமாகும். இந்த ஏரியை சுற்றிலும் 11 கிலோமீட்டர் வரை சைக்கிளிங் செய்யலாம். இயற்கையின் அழகு சூழ்ந்த நீர் நிலைகளின் அருகில் மரங்கள், செடிகள், விலங்குகள், மற்றும் பறவைகளை கண்டு ரசிக்க முடியும். நீர் நாய்கள், நீர் பறவைகள், கீரிகள் போன்ற பல உயிரினங்களையும் காணலாம். அதிகாலையில் சைக்கிளிங் செய்தால், சூரிய உதயத்தை அழகாக கண்டு ரசிக்க முடியும்.
சதுப்பு நிலக்காடுகளில் அமைந்துள்ள அட்வென்ச்சர் பார்க் மேன்குரோவ் மரங்கள் நிறைந்த சதுப்பு நிலத்தில் அமைந்துள்ளது. இங்கு படகு சவாரி, தனிநபர் படகு, இருவர் செல்லும் படகு என பலவிதமான படகு வசதிகள் உள்ளன. செயற்கையாக உருவாக்கப்பட்ட இயற்கை அழகை வெளிநாட்டினர் மிகவும் விரும்புகின்றனர்.
இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலவிதமான ஆக்டிவிட்டீஸ் மூலம் கொண்டாடி மகிழலாம். இந்த இடம் நண்பர்கள் மற்றும் குடும்பங்களுக்கு கண்டிப்பாக ரசிக்க வேண்டிய ஒரு இடமாகும்.
