தெரு ஓரங்களில் அதிகம் காணப்படுகின்ற ஆவாரம் பூ சிலருக்கு மட்டுமின்றி பலருக்கும் அதன் பயன்கள் அறியாதவை. இன்று உலகம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது சர்க்கரை நோய். இந்த நோயை கட்டுப்படுத்தும் சக்தி ஆவாரம் பூக்களுக்கு உண்டு என்கிறார்கள்.
உள்ளுறுப்புகளை பலப்படுத்துவது, உடல் மேனிக்கு பலபலப்பை தருவது அத்தனை நன்மைகள் இந்த ஆவாரம் பூக்களுக்கு உண்டு. இந்த பூக்களை காய வைத்து பொடி செய்து வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் நார்மல் ஆகவே இருக்கும் என்கிறார்கள். அல்லது வெறும் என இந்த இலைகளை நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் கோடி நன்மைகள் பெறலாம்.
மிகவும் குளிர்ச்சையுடைய இந்த பூக்களை உடலில் உள்ள உஷ்ணங்களை நீக்க பயன்படுத்தலாம். அது மட்டும் இல்லாமல்,தலை முடி, வளர்ச்சிக்கும் சரும பாதுகாப்புக்கும், கண்களுக்கு குளிர்ச்சியும் ஆகிய அனைத்து பயன்களையும் தரும் ஆவாரம் பூக்கள் . இப்படி பல நன்மைகளை இந்த ஆவாரம் பூக்கள் தருகிறது என்றாலும், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றே, இவைகளை மருந்தாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
