தற்காலத்தில் தனது வீட்டிலிருந்து வெளியில் ரோட்டில் சென்றாலே கால்களில் செருப்பு அணிந்து செல்ல வேண்டிய சூழ்நிலை. இது சாஸ்திர சம்மதமும் கூட. ஆனாலும் வசிக்கும் வீட்டிற்குள் செருப்பு அணிந்து நடமாடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
மேலும் அக்னி (நெருப்பு) இருக்கும் சமையலறை, ஹோமம் செய்யுமிடம், பசுக்கள் வசிக்கும் கொட்டில் போன்ற இடம், தெய்வங்கள் இருக்கும் ஆலயம், பூஜையறை போன்ற இடம் ஆகியவற்றிலும் அந்தணர்கள் அடியார்கள் முன்னிலையிலும், உணவு (சாப்பாடு) சாப்பிடும் இடத்திலும் வேதம் ஸ்தோத்திரம் சொல்லுதல் மந்திர ஜபம் செய்தல் ஆகிய இடங்களிலும் கட்டாயம் செருப்பு அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
