‘கர்ணன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் துருவ் விக்ரமின் படம், தனுஷின் பெயரிடாதப் படம் ஆகிய இரண்டு படங்களை இயக்குகிறார். முதலில் இந்தப் படங்களைத்தான் இயக்குவதாக இருந்தது.
ஆனால், உதயநிதி ஸ்டாலின் முழுநேர அரசியல்வாதியாய் மாற விரும்புவதால் கடைசியாக மாரி செல்வராஜ் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுது. அதனால், மாரி செல்வராஜ் உதயநிதி படம் முதலில் பொங்கலையொட்டி துவங்கவிருக்கிறதாம். ஏற்கனவே, இப்படத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில், நடிகர் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
கூடவே உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் கமிட் ஆகி இருக்காராம். கேமாரா தேனி ஈஸ்வர் என்றும் இசை ரஹ்மான் என்றும் இருப்பதால் இப்போதே இப்படத்துக்கு டிமாண்ட் ஆகுதாம்
