பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக ஐ.எஃப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்.
இவரை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு (ஏ.சி.சி) ஒப்புதல் அளித்துள்ளது.
2014 பேட்ச் ஐ.எஃப்.எஸ் அதிகாரியான நிதி திவாரி, இந்திய வெளியுறவு சேவைகள் அதிகாரி ஆவார். இவர் பிரதமர் அலுவலகத்தில் (பி.எம்.ஓ.) துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார்.
வெளியுறவு அமைச்சகத்தில் (MEA) ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரப் பிரிவில் துணைச் செயலாளராக இருந்தார்.

