Tuesday, May 19, 2026
Homeசெய்திகள்உயர்கல்வி முதல் IT வரை… முக்கிய துறைகளை தற்காலிகமாக தக்கவைத்த முதல்வர் விஜய்!

உயர்கல்வி முதல் IT வரை… முக்கிய துறைகளை தற்காலிகமாக தக்கவைத்த முதல்வர் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, முதற்கட்டமாக அவருடன் சேர்த்து 10 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றுக் கொண்ட சூழலில், தற்பொழுது 6 முக்கிய இலாக்காக்களுக்குத் தனி அமைச்சர்கள் இல்லாமல் அவை தற்காலிகமாக முதலமைச்சரின் நேரடிப் பொறுப்பிலேயே வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சனிக்கிழமை வெளியான அதிகாரப்பூர்வ இலாக்கா ஒதுக்கீட்டின்படி, தமிழக வரலாற்றிலேயே மிக முக்கியப் துறைகளாகக் கருதப்படும் உயர்கல்வி, விவசாயம், வருவாய்த்துறை, சமூக நலத்துறை, போக்குவரத்து மற்றும் தகவல் தொழில்நுட்பம் (IT) ஆகிய 6 பிரதான இலாக்காக்களுக்குத் தனி அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை;

இந்த முக்கியத் துறைகளைக் கூடுதலாக முதலமைச்சர் விஜய் கவனித்து வரும் நிலையில், வரும் வியாழக்கிழமை (மே 21) அன்று நடைபெற உள்ள அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, இந்த 6 இலாக்காக்களும் புதிய அமைச்சர்களுக்குப் பிரித்து வழங்கப்பட உள்ளன.

குறிப்பாக, கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 இடங்களுக்கான சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்த முக்கிய இலாக்காக்களிலிருந்தே துறைகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தில்லி மற்றும் சென்னை அரசியல் வட்டாரங்களில் பலத்த ஊகங்கள் எழுந்துள்ள அதே வேளையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்திக் குழுவை வழிநடத்தி வரும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தரப்புக்கு இந்த புதிய அமைச்சரவை விரிவாக்கத்தில் எவ்வித அமைச்சர் பதவிகளும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments