Tuesday, May 19, 2026
Homeசெய்திகள்39 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உயிர் பெறும் காரைக்கால் – பேரளம் ரயில் சேவை!

39 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உயிர் பெறும் காரைக்கால் – பேரளம் ரயில் சேவை!

காரைக்கால் – பேரளம் இடையேயான புதிய அகல ரயில் பாதையில், சுமார் 39 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நாளை (மே 20) முதல் வழக்கமான பயணிகள் ரயில் போக்குவரத்துச் சேவைகள் முறைப்படி தொடங்கப்பட உள்ளன.

நஷ்டம் காரணமாகக் கடந்த 1987-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட இந்த வழித்தடச் சேவையானது, தற்போது ரூ. 177 கோடி மதிப்பீட்டில் 23.5 கிலோமீட்டர் தூரத்திற்கு முழுமையாக மின்மயமாக்கப்பட்ட புதிய அகலப் பாதையாக மாற்றப்பட்டுத் திறக்கப்பட உள்ளது;

தென்னக ரயில்வேயின் இந்த அறிவிப்பின்படி, இந்த வழித்தடத்தில் தினமும் ஒரு விரைவு ரயில் (Express) மற்றும் இரண்டு பயணிகள் ரயில்கள் (Passenger) இயக்கப்பட உள்ளதோடு, தாம்பரம் – காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் இனி இந்த புதிய பேரளம் – திருநள்ளாறு வழித்தடத்தின் வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்பட உள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

ஆன்மீகத் தலங்களான திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் மற்றும் வேளாங்கண்ணி பேராலயத்திற்குச் செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும், டெல்டா பகுதி பொதுமக்களுக்கும் நேரடிப் போக்குவரத்து வசதியை வழங்கும் இந்த ரயில் சேவைப் புத்துயிர், அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments