திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் 70 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படும் என்று தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டது.
கடந்த 14ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் (கேரளாவில் விஷூ பண்டிகை) கோவில் சன்னிதானத்தில் ஐயப்பன் உருவத்துடன் கூடிய தங்க டாலர் விற்பனை தொடங்கியது.
4 கிராம் எடை கொண்ட ஐயப்பன் டாலர் ரூ.38,600க்கும், 8 கிராம் எடை கொண்ட ஐயப்பன் தங்க டாலர் ரூ.77,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த தங்க டாலரின் விலை என்பது மார்க்கெட் மதிப்பை பொறுத்து அவ்வப்போது மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் 916 முத்திரையுடன் விற்பனை செய்யப்படுகிறது.
ஒவ்வொரு டாலருமே சன்னிதானத்தில் வைத்து பூஜை செய்த பிறகே விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த டாலரை பக்தர்கள் ஆன்லைனில் sabarimalaonline dot org என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து வாங்கலாம்.

